தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
கறம்பக்குடியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்!
கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி சீனிக் கடை முக்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் முருகப்பன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கறம்பக்குடியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புறவழிச்சாலை திட்டப் பணிகளை உடனே தொடங்க வேண்டும்.
அரசு மருத்துவமனையில் மருத்துவக் காலிப்பணியிடங்களை உடனே நிரப்புவதோடு, தேவையான மருத்துவப் பரிசோதனை கருவிகளையும் வரவழைத்து, மேம்படுத்த வேண்டும். சாா் பதிவாளரகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். மாவட்ட துணைச் செயலா் ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் ஜேசுராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.