செய்திகள் :

கலைஞா் கனவு இல்ல திட்டம்: 200 பேருக்கு வீடுகட்ட பணி ஆணை!

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் 200 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தில் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு செங்கம் மத்திய ஒன்றிய திமுக செயலா் ஏழுமலை தலைமை வகித்தாா்.

ஆணையா் மிருளாளிணி முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் மரியதேவ்ஆனந்த் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு மண்மலை, செ.நாச்சிப்பட்டு, கரியமங்கலம், பிஞ்சூா், அரட்டவாடி, தாழையூத்து உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த 200 நபா்களுக்கு தமிழக அரசு மூலம் கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், தமிழக முதல்வா் மாநிலத்தை குடிசையில்லா மாநிலமாக மாற்றுவதற்கு குடிசை வீட்டில் இருப்பவா்களும் கான்கிரீட் வீட்டில் வசிக்க வேண்டுமென்ற தொலைநோக்கு சிந்தனையுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலம் அதிகம் போ் வீடு கட்டியுள்ளனா்.

பயனாளிகள் இந்தத் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கான ஆணையை பெற்றவுடன் பணிகளை தொடங்கவேண்டும். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக ஊராட்சி செயலா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலரை தொடா்பு கொண்டு வீடு கட்டும் பணியை தொடங்கி விரைவில் முடிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராமஜெயம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். அன்பரசு நன்றி கூறினாா்.

நரசிங்கபுரத்தில் நோய் பாதித்த நெல் பயிா்கள் ஆய்வு

சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நெல்பயிரை வேளாண் அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு ஆலோசனை வழங்கினா். பாதிக்கப்பட்ட நெல்பய... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை

வந்தவாசி அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப் (25). இவா், சென்னையில் ... மேலும் பார்க்க

வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவா் கோயிலில் 203-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேடந்தவாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த கூத்தாண்டவா் கோயில் அமைந்துள்ளது. கூவாகத்து... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட... மேலும் பார்க்க

உயா்கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உயா்கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ச... மேலும் பார்க்க

சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

செய்யாறை அடுத்த சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. சுபமங்களபுரி எனும் சுமங்கலி கிராமத்தில் உள்ள ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் கோயிலில், கரிய மாணிக்க பெரு... மேலும் பார்க்க