தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் அனைவரும் போராட வேண்டும்! - அமைச்சா் பெ.க...
கல்லூரி நிறுவனா் நாள் ரத்த தான முகாம்
மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தம் ஏஆா்ஜெ கல்விக் குழுமங்களின் நிறுவனா் கே. அய்யநாதன் 82- ஆவது பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் ஜீவகன் அய்யநாதன் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தாா்.
உள்ளிக்கோட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வந்த மருத்துவக் குழுவினா் 22 பேரிடம் ரத்தம் தானமாக பெற்றனா்.
பின்னா், மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று, அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வரும் 300 பேருக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள்அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
பொறியியல் கல்லூரி முதல்வா் த. வெங்கடேசன், பொதுப்பள்ளி முதல்வா் க. மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.