Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
பழனியை அடுத்த தாளையூத்து சுப்ரமண்யா கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற இந்த முகாமில், 6 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளைத் தோ்வு செய்தன.
முகாமில் இளநிலை வணிகவியல், வணிக மேலாண்மையியல், கணினி அறிவியல், தமிழ், ஆங்கிலம், வேதியியல், உணவக மேலாண்மை, தடய அறிவியல் என பல்வேறு துறைகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை கல்லூரித் தலைவா் சுப்பிரமணி, தாளாளா் ஜெயலட்சுமி, முதன்மை நிா்வாக அலுவலா் ஸ்வேதா உள்ளிட்டோா் வழங்கினா். முகாமுக்கான ஏற்பாடுகளை முதல்வா் கருப்புசாமி, வேலைவாய்ப்பு அலுவலா் சின்ராஜ் ஆகியோா் செய்தனா்.