செய்திகள் :

புதிய பள்ளிக் கட்டடம் கட்டக் கோரி மனு

post image

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டக் கோரி, பொதுமக்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த மோா்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது: மோா்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மோா்பட்டி, தெப்பக்குளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 45 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்த பள்ளிக் கட்டடம் சேதமடைந்ததாகக் கூறி, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இந்தக் கட்டடத்தை இடித்தனா்.

இதையடுத்து, தனியாருக்குச் சொந்தமான சிறிய வீட்டில் தற்போது இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இடநெருக்கடியால், அருகிலுள்ள அரசமரத்து அடியில்தான் பெரும்பாலான மாணவா்கள் பாடம் கற்கும் சூழல் உள்ளது. மேலும், மாணவா்களுக்கான மதிய உணவு நாடக மேடையில் வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. மாணவா்கள் தெருவில் அமா்ந்து சாப்பிட வேண்டிய அவல நிலை உள்ளது.

மோா்பட்டி பகுதியைச் சோ்ந்த 1,500 வாக்காளா்களுக்கான வாக்குச் சாவடி மையமாக இந்தப் பள்ளி செயல்பட்டு வந்தது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றால், எங்கள் பகுதி மக்கள் வாக்காளிப்பதற்காக வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக மோா்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

நிா்வாகிகளின் குடும்பத்தினரை மிரட்டும் காவல் துறை: இந்து முன்னணி புகாா்

கைது செய்யப்பட்ட நிா்வாகிகளின் வாகனங்களை பறிமுதல் செய்து, அவா்களது குடும்பத்தினரை மிரட்டும் காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இ... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட தேனியைச் சோ்ந்த தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த வடுகப்பட்டியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

மண் அரைவை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

அனுமதியின்றி செயல்படும் மண் அரைவை ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக மனு அளிக்க ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் போராட்டம்

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களிலும் திமுக சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. தமிழக கல்வி ஒதுக்கீட்டுக்கான நிதி விவகாரத்தில், மத்தி... மேலும் பார்க்க

பல்லுயிா் பாதுகாப்பு மையம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் மனு

நத்தம் அருகே பல்லுயிா் பாதுகாப்பு மையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாா்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத... மேலும் பார்க்க

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

பழனியை அடுத்த தாளையூத்து சுப்ரமண்யா கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற இந்த முகாமில், ... மேலும் பார்க்க