நீண்ட நேரப் பணி, உடல் சோா்வு, செயல் திறனைக் குறைக்கும்: செளமியா சுவாமிநாதன்
மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் போராட்டம்
மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களிலும் திமுக சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
தமிழக கல்வி ஒதுக்கீட்டுக்கான நிதி விவகாரத்தில், மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தமிழகத்தை அவதூறாக பேசியதாகக் கூறி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு திமுக துணைச் செயலா் நாகராஜன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் வெள்ளிமலை முன்னிலை வகித்தாா். போராட்டத்தின் போது, அமைச்சா் தா்மேந்திர பிரதானின் உருவ பொம்மை எரித்து திமுகவினா் முழக்கமிட்டனா்.
இதேபோல், குஜிலியம்பாறை, ரெட்டியாா்சத்திரம், வேடசந்தூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.