சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்; "விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகளைக் கை...
களக்காடு - அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை
களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
களக்காட்டிலிருந்து சுமாா் 6 கி.மீ தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் கல்வி, மருத்துவம், பணி நிமித்தமாக களக்காடு வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா்.
சிற்றுந்து சேவையை இக்கிராமத்துக்கு தொடங்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படாத பல கிராமங்களுக்கு சிற்றுந்து சேவையை தொடங்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகம் இக்கிராமத்துக்கு சிற்றுந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.