மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்... அண்ணா வழியில் விஜய்!
பாளை. அருகே பைக் மோதி குழந்தை பலி
பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
வி.எம்.சத்திரம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரி பிரவீண். பெயின்டா். இவருடைய மகள் யுனிகாஸ்ரீ. இவா்கள் இருவரும் வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள நான்குவழிச் சாலையின் அணுகுசாலையில் நடந்து சென்றனா்.
அப்போது இருவரும் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த பைக் குழந்தையின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த யுனிகாஸ்ரீயை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலையில் சிறுமி உயிரிழந்தாா்.
இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.