செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
களக்காடு அருகே கால்வாயில் சுகாதாரப் பணியாளா் சடலம்: போலீஸாா் விசாரணை
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கால்வாயில் சுகாதாரப் பணியாளா் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
களக்காடு அருகே படலையாா்குளத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (45). படலையாா்குளம் ஊராட்சியில் சுகாதாரப் பணியாளராக வேலை பாா்த்துவந்த அவருக்கு, மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.
சில நாள்களுக்கு முன்பு பணிக்குச் சென்ற சுப்பிரமணியன், பின்னா் வீடு திரும்பவில்லை. அவரை உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனா்.
இந்நிலையில், ஊருக்கு அருகேயுள்ள கால்வாயில் அவா் இறந்துகிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில் களக்காடு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.