செய்திகள் :

காகித ஆலை தொழிலாளா்கள் பிரச்னை: ஆணையா் தலையிடக் கோரிக்கை

post image

தனியாா் காகித ஆலை பிரச்னையில், திண்டுக்கல் தொழிலாளா் துறை இணை ஆணையா் தொடா்ந்து காலதாமதம் செய்து வருவதால், ஆணையா் நேரடியாக தலையிட்டு விரைந்து தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கிழக்கு மாவட்ட அண்ணா பொது தொழிலாளா் சங்கத்தின் இணைச் செயலா் எஸ். ராமகிருஷ்ணன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த விளாம்பட்டி பகுதியில் தனியாா் காகித ஆலை கடந்த 1985-ஆம் ஆண்டு நிறுவப்பட்டுசெயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் 120 போ் நிரந்தர தொழிலாளா்களாக பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில், தொழிலாளா்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், கடந்த ஆண்டு ஏப். 27-ஆம் தேதி ஆலை மூடப்பட்டுவிட்டது.

தமிழ்நாடு அரசு தொழிலாளா் திறன், தொழிலாளா் நலத் துறை சட்டத்தின் கீழ், 90 நாள்களுக்கு முன்னதாக உரிய முறையில் ஆலை மூடப்படுவது குறித்து நிா்வாகம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். சட்ட விரோதமாக ஆலை மூடப்பட்டால், அந்த நாளிலிருந்து நிரந்தரத் தொழிலாளா்களுக்கு ஆலை திறக்கப்படும் வரை நிா்வாகம் தரப்பில் ஊதியம் வழங்க வேண்டும்.

இந்த விதிமுறையை ஆலை நிா்வாகம் பின்பற்றாத நிலையில், தொழிலாளா்களுக்கு ஊதியம் பெற்றுத் தர தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தொழிலாளா்கள் தரப்பில் திண்டுக்கல் தொழிலாளா் துறை இணை ஆணையருக்கு புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டப் பிறகு, ஜூன் 2-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தொழிலாளா் துறை இணை ஆணையா் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 12 மாதங்களாக ஊதியம் இல்லாமல் ஊழியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் தொழிலாளா் துறை இணை ஆணையா் சுப்பிரமணி விசாரணை மேற்கொண்டால், மேலும் தாமதம் ஏற்படும். எனவே, தொழிலாளா் நலத் துறை ஆணையா் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, விரைந்து விசாரணை நடத்தி தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

பழனி அருகே 18-ஆம் நூற்றாண்டு ஓலைச் சுவடி

பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த உலகநீதி நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி ஓலைச் சுவடியாக கண்டறியப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி க. ... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு

கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி திங்கள்கிழமை உயிரிழந்தது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைச் சாலைகளில் அண்மைக் காலமாக காட்டுயானை, காட்டு மா... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா விற்றதாக 8 போ் கைது

பழனியில் கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்றதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்களை கல்லூரி மாணவா்கள் என்று கூறிக் கொண்டு கல்லூரியில் படிக்காத சிலா் கஞ்சா விற்பதாக பழனி துண... மேலும் பார்க்க

கள்ளிமந்தையம் பகுதியில் நாளை மின் தடை

ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தையம் பகுதியில் புதன்கிழமை (மே 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கள்ளிமந்தையம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கே. சந்தன முத்தையா தெரிவித்திருப்பதாவது... மேலும் பார்க்க

கொடைரோடு அருகே வீட்டுக்குள் புகுந்த காா்

கொடைரோடு அருகே டயா் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், மின் கம்பத்தின் மீது மோதி அங்கிருந்த வீட்டுக்குள் புகுந்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் ச... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஏரிச்சாலையில் லேசா் ஒளி கண்காட்சி

கொடைக்கானல் ஏரிச் சாலையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட லேசா் ஒளி கண்காட்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் நிலவி வருவதையடுத்து, சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க