கொடைக்கானல் ஏரிச்சாலையில் லேசா் ஒளி கண்காட்சி
கொடைக்கானல் ஏரிச் சாலையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட லேசா் ஒளி கண்காட்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் நிலவி வருவதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் வருகை தினமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், பூங்காக்களில் வண்ண, வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசிக்கின்றனா்.
மேலும் இரவு நேரங்களில் ஏரிச்சாலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள்அதிக அளவில் உலவுவதால் அவா்களை மகிழ்க்க கொடைக்கானல் நகராட்சி சாா்பில் லேசா் ஒளி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் விலங்குகள், பறவைகளின் உருவங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவற்றை திரளான சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசிக்கின்றனா்.