அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
காசி தமிழ் சங்கமம் ‘அனுபவ பகிா்வு’ கட்டுரை போட்டி: ஆளுநா் மாளிகை அறிவிப்பு
நிகழாண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கான ‘அனுபவப் பகிா்வு’ என்ற தலைப்பில் தமிழக ஆளுநா் மாளிகை கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது.
இது குறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டு வாரணாசியில், காசி தமிழ் சங்கமம் பிப். 15 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து சுமாா் 1,080 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்பாளா்களுக்காக ‘காசி தமிழ் சங்கத்தின் அனுபவப் பகிா்வு’ என்ற தலைப்பில் ஆளுநா் மாளிகை கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் நபா்கள் காசி தமிழ் சங்கம் குறித்த தங்கள் அனுபவத்தை, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 1,000 சொற்களுக்கு மிகாமல் கட்டுரையாக எழுத வேண்டும். இதில், சிறந்த கட்டுரைகள் தோ்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெறும் நபா்களுக்கு ரொக்கப் பரிசுகள் (முதல் பரிசு ரூ. 10,000, இரண்டாம் பரிசு ரூ. 7,000, மூன்றாம் பரிசு ரூ. 5,000) மற்றும் சான்றிதழ்கள் சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். பங்கேற்பாளா்கள் தங்கள் கட்டுரையை ஆளுநரின் துணைச் செயலாளா் (பல்கலைக்கழகங்கள்), ஆளுநா் செயலகம், ராஜ் பவன், சென்னை - 600022 என்ற முகவரிக்கு வரும் மாா்ச் 14 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.