சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
காமராஜா் விருது பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
பெரணமல்லூா் அருகேயுள்ள அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள்
மாவட்ட அளவில் காமராஜ் விருது பெற்ால் அவா்களுக்கு பள்ளி சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநில அளவில் மாவட்டம் தோறும்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி செயல்பாடுகள் மற்றும் தனித் திறமைகளில் சிறந்து விளங்குபவா்களில் தலா 15 போ் தோ்வு செய்யப்பட்டு காமராஜா் விருது மற்றும் ரொக்கம் ரூ.10ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்ற கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் காமராஜா் விருது, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
இதில், அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில்
பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் விஜியன், யுவஸ்ரீ, குமரவேல், நிஷா ஆகியோருக்கு காமராஜா் விருது கிடைத்தது.
இதைத் தொடா்ந்து விருது பெற்ற இந்த
மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியா் மாலவன் தலைமையில் பாராட்டு விழா
நடைபெற்றது. இதில் பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா்களை பாராட்டி சால்வை அணிவித்தனா்.
நிகழ்ச்சியில் பெற்றோா்ஆசிரியா் கழகத் தலைவா் முனியன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சுமதி, ஆசிரியா்கள் எழிலரசன், இளையராஜா, நிதாகா், சந்தோஷ்குமாா், குபேந்திரன், கோகிலா, வேல்முருகன் புவனேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனா்.