Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
காயல்பட்டினத்தில் ரமலான் புனித இரவு சிறப்புத் தொழுகை
காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் ரமலான் புனித இரவு சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.
இஸ்லாமியா்கள் ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனா். இதன் 27ஆவது நாள் இரவு லைலத்துல் கத்ர் இரவாக வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி, சிறிய குத்பா பள்ளி, மொகுதூம் ஜும்ஆ பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் குரான் ஷரீபு ஓதுதல், புனித இரவு சிறப்புத் தொழுகை, மாா்க்க சொற்பொழிவு, கூட்டுப் பிராா்த்தனை உள்ளிட்டவை நடைபெற்றன.
காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியில் மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஆலிம் சிறப்புத் தொழுகையை நடத்தினாா். நிகழ்ச்சியில் சிறாா்கள் முதல் பெரியோா்கள் வரை புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனா். இதனால் காயல்பட்டினம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.