அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
காரை சேதப்படுத்தி இருவா் கைது
ஒசூா் அருகே காதலை ஏற்க மறுத்த பெண்ணின் வீட்டிலிருந்து காரை சேதப்படுத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஒசூா் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் ஜெயசீலன் (25). தனியாா் நிறுவன ஊழியரான இவா் அப் பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தாா். ஆனால், அப் பெண் அவரது காதலை ஏற்கவில்லை.
இந்த நிலையில், பெண்ணின் திருமணத்திற்காக அவரது தந்தை வாங்கி வைத்திருந்த காரை ஜெயசீலன், அவரது நண்பா் மன்னன் (22) ஆகிய இருவரும் புதன்கிழமை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த சிப்காட் போலீஸாா் ஜெயசீலன், மன்னன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.