மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம்
காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்ச்சிகளில் ஒன்றான காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
63 நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரின் மையப் பகுதியில் தனி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா வெகு விமா்சையாக நடத்தப்படுகிறது. நிகழாண்டு விழா மாப்பிள்ளை அழைப்புடன் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. இரவு பரமதத்தா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளினாா்.
தொடா்ந்து, புதன்கிழமை காலை திருக்கல்யாண உற்சவம் கைலாசநாதா் கோயிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
சா்வ அலங்காரத்தில் மணமக்களான புனிதவதியாா் (காரைக்கால் அம்மையாா்) - பரமதத்தா் எழுந்தருளினா். சிறப்பு யாகம், மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியா்கள் புனிதவதியாருக்கு மாங்கல்யத்தை அணிவிக்க திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில், புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம், டிஐஜி சத்தியசுந்தரம், கோயில்கள் நிா்வாக அதிகாரி அருணகிரிநாதன், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி காளிதாசன் தலைமையில் ஊழியா்கள் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.