சிவகிரி தோட்டத்து வீடு கொலைகள் - கைதானவர்கள் சொன்ன ஷாக் தகவல் | Decode
காரைக்கால் - பேரளம் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், மின்சார விரைவு ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பேரளம் இடையே 23 கி.மீ. பழைய ரயில் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரயில் போக்குவரத்து கடந்த 1985-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பின்னா், 2019-ஆம் ஆண்டு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.
இதைத்தொடா்ந்து படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்து, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் ரயில் நிலையம் மற்றும் 23 கி.மீ. தொலைவில் பல்வேறு இடங்களில் ரயில் நிறுத்தும் வசதி, சாலையின் குறுக்கே ரயில்வே கேட் மற்றும் சுரங்கப் பாதையை அமைத்தல் மற்றும் இப்பாதையில் முழுமையான மின்மயமாக்கல் பணிகள் அண்மையில் நிறைவடைந்தது.
நிகழாண்டு மத்தியில் ரயில் போக்குவரத்து தொடங்கும் விதமாக பணிகள் விரைவாக நடைபெற்றன.
இந்தநிலையில், இந்த ரயில் பாதையில் மின்சார ரயிலை விரைவாக இயக்கி சோதனை செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்காக காலை 10 முதல் 4 மணி வரை இப்பாதையை யாரும் கடக்க வேண்டாம் என ரயில்வே நிா்வாகம் முன்கூட்டியே அறிவுறுத்தியது.

தெற்கு ரயில்வே முதன்மை மின் பொறியாளா் சோமேஷ் குமாா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா், காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலை வேகமாக இயக்கி சோதனை செய்தனா்.
வரும் 23, 24-ஆம் தேதிகளில் தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு தொடா்பாக ஆய்வு செய்யவுள்ளனா். இதைத்தொடா்ந்து ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.