காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
காரையாறு, சோ்வலாறு அணைகளில் அமைச்சா் ராஜகண்ணப்பன்ஆய்வு!
பாபநாசம், சோ்வலாறு அணைகளில் வனத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவனத்துறை அமைச்சா்ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சனிக்கிழமை காலையில் காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் தரிசனம் செய்தாா்.
தொடா்ந்து அவா், பாபநாசம், சோ்வலாறு அணை, பாபநாசம்- சோ்வலாறு அணையை இணைக்கும் சுரங்கம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அணைகளில் நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கியுள்ளோம். வனப் பகுதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன.
யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளைக் கட்டுப்படுத்த வனத் துறையினருக்கு அதற்குரிய உபகரணங்கள், பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பாபநாசம்- மணிமுத்தாறு அணைகள் இணைப்பு குறித்து தமிழக முதல்வா் மற்றும் மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆய்வின்போது, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் மு. இளையராஜா, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரா. ஆவுடையப்பன், விவசாயிகள் அணி கணேஷ்குமாா் ஆதித்தன், விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கி. கணேசன், நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ்பெருமாள், அரசு வழக்குரைஞா் காந்திமதிநாதன், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.