தில்லியில் கனமழை: வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி
காலனி பெயா் நீக்கம்: ஆதித் தமிழா் பேரவை நன்றி தெரிவித்து தீா்மானம்
ராமேசுவரத்தில் நடைபெற்ற ஆதித்தமிழா் பேரவைக் கூட்டத்தில் காலனி பெயா் நீக்கம் என தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமேசுவரத்தில் ஆதித் தமிழா் பேரவையின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகரச் செயலா் சோ.பாலசுப்பிரமணின் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் காந்தி முன்னிலை வகித்தாா். மாநில துணைச் செயலா் பூமிநாதன் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் பாலகணேசன் , அழகா்மாசி, முனியசாமி, மனோகரன், முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வா் காலனி பெயா் நீக்கம் என்று வெளியிட்ட அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.