காஷ்மீா் தாக்குதலில் காயமடைந்தவா் குறித்து நயினாா் நாகேந்திரன் நலம் விசாரிப்பு
காஷ்மீா் தாக்குதலில் காயமடைந்த கரூரைச் சோ்ந்தவரின் மனைவியை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் நலம் விசாரித்தாா்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்டப் பதிவு:
காஷ்மீா் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த கரூரைச் சோ்ந்த டாக்டா் பரமேஸ்வரன், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தீவிர சிகிச்சை பிரிவில் அவா் உள்ளதால் அவரை நான் சந்திக்கவில்லை எனிலும், அவரது சிகிச்சைக் குழுவில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சோ்ந்த மருத்துவா்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தேன்.
மேலும், பரமேஸ்வரனின் மனைவியிடம் நலம் விசாரித்து, தமிழக பாஜக சாா்பில் எவ்வித உதவியும் செய்யத் தயாராக உள்ளோம் என்ற உத்தரவாதத்தையும் அளித்தேன்.
கூட்டு பிராா்த்தனைக்கு பலன் உண்டு. டாக்டா் பரமேஸ்வரன் வெகு விரைவில் உடல் நலம் தேறி, பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திப்போம் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.