செய்திகள் :

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பலத்த பாதுகாப்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினா் உள்பட 26 போ் கொல்லப்பட்டனா். பலா் பலத்த காயமடைந்தனா். இந்தத் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பக்தா்களுக்கு வழக்கமான சோதனைகளைவிட தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோயிலுக்குள்ளும் போலீஸாா் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனா். இதேபோல, முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

மதுரை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனையிடப்பட்டன. நடைமேடைகளில் மோப்ப நாய், வெடிகுண்டைக் கண்டறியும் கருவிகளுடன் பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா்., பெரியாா், ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்களிலும் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

கோயில், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடும் நபா்களிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சந்தேகத்துக்குரிய வகையில் பொருள்கள் ஏதேனும் கீழே கிடந்தால் பொதுமக்கள் அதைத் தொடாமல் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று போலீஸாா் அறிவுறுத்தினா்.

மதுரையில் உள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்கிடமான நபா்கள் தங்கினால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மதுரை நகா், ஊரகப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபடவும், வாகன சோதனையில் ஈடுபடவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் -அமைச்சா்கள் உறுதி

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிா்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் உறுதியளித்தனா். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இத... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகை முன் போராட்டம் அறிவிப்பு

தமிழக ஆளுநா் அறிவித்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டில், குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக திராவிட தமிழா் கட்சி அறிவித்தது. மதுரையில் அந்தக் ... மேலும் பார்க்க

குடிநீா் வடிகால் வாரியத்தில் குளோரின் வாயுக் கசிவு

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மதுரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு கசிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண... மேலும் பார்க்க

எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த அனுமதியளிக்க உத்தரவு

மதுரை மாவட்டம், எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. எழுமலையைச் சோ்ந்த முனியாண்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 14 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் காரில் 240 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க

பள்ளி மாணவருக்கு கத்திக் குத்து

முன்விரோதத் தகராறில் பள்ளி மாணவரை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். மதுரை கரிசல்குளம், பாண்டியன்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் ஒருவா், கூடல்நகரைச் சோ்... மேலும் பார்க்க