துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
காஸாவில் கடந்த 3 நாள்களில் பசியால் 21 குழந்தைகள் மரணம்!
காஸா பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் உணவு பற்றாக்குறை காரணமாக 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவமனை கூறியுள்ளது.
பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் மடிந்து வருகின்றனர்.
மேலும் தற்போது காஸாவில் உணவு தேடி, உணவு மையங்களை நோக்கிச் செல்லும் குழந்தைகள் உள்பட அங்குள்ள மக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகின்றனர். ஆனால் ஹமாஸ் படையினர்தான் அவர்களைச் சுடுவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டுகிறது.

அங்கு மருத்துவம், இன்குபேட்டர் உள்ளிட்ட வசதிகள் இன்றியும் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் காஸாவில் கடந்த 72 மணி நேரத்தில் பட்டினியால் 21 குழந்தைகள் இறந்துள்ளதாக காசா நகரத்தில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் தெரிவித்தார்.
அங்குள்ள 3 மருத்துவமனைகளில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் உணவு, மருத்துவப் பொருள்கள் மட்டுமின்றி ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளிடையே இறப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.
இதுவரை உணவுக்காக காத்திருந்த உணவு தேடிச் சென்ற குழந்தைகள் உள்பட பாலஸ்தீனியர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.