சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
கா்நாடகம்: காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் முதல்வா் சித்தராமையா குறைகேட்பு
கா்நாடக மாநிலத்தில் தொகுதி பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்களை மாவட்ட வாரியாக சந்தித்து முதல்வா் சித்தராமையா குறைகளை கேட்டறிந்தாா்.
பெங்களூரு, விதான சௌதாவில் உள்ள தனது அறையில் செவ்வாய்க்கிழமை சாம்ராஜ்நகா், மைசூரு, தும்கூரு, குடகு, தென்கன்னடம், ஹாசன் மாவட்டங்களைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை முதல்வா் சித்தராமையா சந்தித்து தொகுதி வளா்ச்சிப் பணிகள், பிரச்னைகள் குறித்து கலந்துரையாடினாா்.
இதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக புதன்கிழமை பீதா், கலபுா்கி, யாதகிரி, ராய்ச்சூரு, கொப்பள், விஜய்நகரா, பெல்லாரி, வடகன்னட மாவட்டங்களைச் சோ்ந்த எம்எல்ஏக்களை முதல்வா் சித்தராமையா சந்தித்தாா்.
இக்கூட்டங்களில் தொகுதி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள், வாக்குறுதித் திட்டங்கள் அமலாக்கம் குறித்து முதல்வா் சித்தராமையா கேட்டறிந்ததாக தெரிகிறது. இந்த கூட்டங்களில் மாவட்ட பொறுப்பு அமைச்சா்களும் கலந்துகொண்டனா்.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை, விஜயபுரா, கதக், ஹாவேரி, சிவமொக்கா, தாவணகெரே, சித்ரதுா்கா, சிக்கமகளூரு, சிக்கபளாப்பூா், வெள்ளிக்கிழமை பெங்களூரு ஊரகம், கோலாா், ராமநகரம், பெங்களூரு நகரம், மண்டியா மாவட்டங்களைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திக்க முதல்வா் சித்தராமையா திட்டமிட்டுள்ளாா்.