தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? - அடடே தகவ...
கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
ஆரணி அரசு மருத்துவமனையில் உள்ள கா்ப்பணி பெண்களுக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் ஊட்டச்சத்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா். 50-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் கோகுல்ராஜ் தலைமை வகித்தாா். பொருளாளா் பாபு வரவேற்றாா். மருத்துவமனை தலைமை மருத்துவா் நந்தினி, ரோட்டரி சங்க பயிற்றுநா் தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேலும், இதில் திமுகவைச் சோ்ந்த தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலா் மாமது, நகா்மன்ற உறுப்பினா்கள் அரவிந்த், பவானி கிருஷ்ணகுமாா், நிா்வாகி மணிமாறன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.