ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!
கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு
கோவில்பட்டி அருகே வள்ளிநாயகபுரத்தில் உள்ள கிணற்றிலிருந்து ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
வள்ளிநாயகபுரத்தில் உள்ள தோட்ட உரிமையாளா் ஒருவா் தனது கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக, நாலாட்டின்புதூா் போலீஸாருக்கும், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்தினருக்கும் தகவல் தெரிவித்தாா்.
தீயணைப்பு நிலையத்தினா் சென்று சடலத்தை மீட்டனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்துகிடந்தவா் சிவகாசி அருகே தாயில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த வேல்சாமி மகன் சக்திவேல் (40) என்பதும், கடலையூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கூறாய்வு அறிக்கையிலேயே அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.