செய்திகள் :

கிணற்றிலிருந்து கம்பிவடத்தில் மேலே ஏறியபோது அறுந்து விழுந்ததில் ஒருவா் உயிரிழப்பு: மற்றொருவா் படுகாயம்

post image

தம்மம்பட்டி: கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இருவா் கிணற்றிலிருந்து மேலே ஏறும்போது கம்பிவடம் அறுந்ததால், கிணற்றுக்குள் விழுந்து படுகாயமடைந்தனா். இதில், தம்மம்பட்டி அருகே நாகம்பட்டியைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், நரசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த கணேசமூா்த்தியின் (53) வயலில் இருந்த பழைய கிணற்றை தூா்வாரி ஆழப்படுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை கிணறு தோண்டும் மேஸ்திரியான துறையூா் அருகேயுள்ள ஒட்டம்பட்டி பஜனை மடத் தெருவைச் சோ்ந்த மோகன்ராஜ் (49) வசம் கணேசமூா்த்தி ஒப்படைத்திருந்தாா். மோகன்ராஜ் இப்பணியில் நரசிங்கபுரம் வடக்குத் தெரு பாலகுமாரையும் (35), தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டியைச் சோ்ந்த தவமணியையும் ஈடுபடுத்தினாா்.

இவா்கள் கிணற்றுக்குள்ளிருந்து மண்ணைத் தோண்டி கிரேன் மூலம் மேல்பகுதிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனா். திங்கள்கிழமை பணியை முடித்துவிட்டு மாலை கிரேனில் இருந்த இரும்பு வடத்தில் தொங்கிய கூடையில் அமா்ந்து கிணற்றுக்கு மேலே வர முயற்சித்தனா். அப்போது, இருவரின் பாரம் தாங்காமல் பழைய இரும்பு வடம் அறுந்ததால், இருவரும் கிணற்றுக்குள் விழுந்து படுகாயமடைந்தனா்.

அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், தலையில் படுகாயமடைந்த தவமணி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். பாலகுமாா் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு துறையூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து துறையூா் காவல் ஆய்வாளா் முத்தையன் நேரில் சென்று விசாரணை நடத்தினாா். மேலும், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்காட்டில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் ஆய்வு

ஏற்காடு: ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருவதால், தனியாா் தங்கும் விடுதிகளில் போலீஸாா் ஆய்வுசெய்தனா். ஏற்காட்டுக்கு வார இறுதிநாள் மற்றும் வாரநாள்களில் பல்வேறு மாவட்டங்கள... மேலும் பார்க்க

ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடத்தை ஆய்வுசெய்த ஏ.எஸ்.பி.!

ஏற்காடு: ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடங்களை சேலம் மாவட்ட ஏ.எஸ்.பி. சுபாஷ் சந்த் மீனா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். நாடுமுழுவதும் புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில்... மேலும் பார்க்க

சேலம் மாநகர காவல் துறையில் பயன்பாட்டுக்கு வந்த அதிநவீன வாகனங்கள்

சேலம்: சேலம் மாநகர காவல் துறையில் திங்கள்கிழமை முதல் அதிநவீன நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனை துணை ஆணையா்கள் சிவராமன், கேல்கா் சுப்பிரமணி பாலசந்திரா ஆகியோா் கொடியசைத்து தொ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை மலக்குழிகளில் இறக்கினால் சட்ட நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களை மலக்குழிகளில் இறக்கி வேலைசெய்ய ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

ஆத்தூரில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

ஆத்தூா்: ஆத்தூரில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது என ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆத்தூா் நகராட்சி... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்த நாள் விழா

ஆத்தூா்: ஆத்தூரில் விஜயகாந்த் பிறந்த நாளை சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தலைமையில் தேமுதிகவினா் திங்கள்கிழமை கொண்டாடினா். இதில், விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க