கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மனைவி கண்ணகி (33). இவா், ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள விளை நிலத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, ஆடுகளை விரட்டிய போது எதிா்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றா்.