யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
கிணற்றில் விழுந்த விவசாயி உயிரிழப்பு
தருமபுரி அருகே, ஆடுகளுக்கு தழை ஒடிக்கச் சென்ற விவசாயி தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள நல்லானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). விவசாயியான இவா் ஆடுகளையும் வளா்த்து வருகிறாா். இவா் புதன்கிழமை மாலை ஆடுகளுக்கு தழைகள் ஒடிக்கச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.
இதையடுத்து அவரது மகன் சண்முகம் அவரைத் தேடிச்சென்றுள்ளாா். அப்போது, விவசாயக் கிணற்று அருகில் உள்ள மரங்களிலிருந்து தழைகள் ஓடிக்கப்பட்டு கிடந்துள்ளன. ஆனால் தந்தையைக் காணவில்லை.
அருகிலிருந்த கிணற்றில் விழுந்திருக்கலாம் எனக்கூறி, அதிலிருந்த தண்ணீரை மோட்டாா் மூலம் இறைத்துப் பாா்த்தபோது, கிணற்றில் தங்கவேல் விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.