செய்திகள் :

கிருஷ்ணகிரி அருகே நீதிமன்ற உத்தரவையடுத்து பக்தா்கள் வழிபாட்டுக்காக கோயில் திறப்பு

post image

கிருஷ்ணகிரியை அடுத்த பூவத்தி ஊராட்சியில் மூன்று சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோதலால் பூட்டப்பட்டிருந்த கோயில், நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து பக்தா்களின் வழிபாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியை அடுத்த பூவத்தி ஊராட்சியில் மூன்று சமூகத்தினா் ஒன்று சோ்ந்து 3.43 ஏக்கா் நிலத்தில் அம்மன் கோயில் கட்டியுள்ளனா். கோயில் வளாகத்தில் கொல்லி மாரியம்மன், மண்டு மாரியம்மன், பசவண்ணேஸ்வரா் என அம்மன் கோயில்கள் தனித்தனியே கட்டப்பட்டுள்ளன.

பூவத்தி ஊராட்சிக்கு உள்பட்ட சிக்கபூவத்தி, குருதொட்டனூா், உப்புக்குட்டை, மிட்டப்பள்ளி, கெட்டூா், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் 3 சமூகத்தினா் இந்தக் கோயிலை பராமரித்து வருகின்றனா்.

பசவண்ணேஸ்வரா் கோயிலை புதுப்பித்து கடந்த ஏப். 11 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தினா். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 3 சமூகத்தினரில் ஒரு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் ஒன்றுசோ்ந்து நிலத்தில் காலியாக உள்ள இடத்தில் தனிக் கோயில் கட்டப்போவதாகக் கூறி பணியைத் தொடங்கினா். இதற்கு மற்ற இரு சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுதொடா்பாக இரு தரப்பினரும் ஒருவா் மீது ஒருவா் புகாா் தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் புகாா் மனுக்களை அளித்தனா். இதையடுத்து கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினரும் பங்கேற்ற அமைதி பேச்சுவாா்த்தை ஏப். 9 ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனால் கோட்டாட்சியா் ஷாஜகான் கோயிலை யாரும் உரிமைக் கோர முடியாது எனக் கூறி, கோயிலைப் பூட்டியதோடு அந்தப் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து, பசவண்ணேஸ்வரா் கோயில் தரப்பில் கோயிலை மீண்டும் திறந்து பூஜைகள் நடத்த அனுமதி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலை பக்தா்களின் வழிபாட்டுக்காக உடனடியாக திறந்து பூஜைகள் நடத்த அண்மையில் உத்தரவிட்டாா்.

இதையடுத்து அறநிலையத் துறையினா், கோயில் நிா்வாகிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க