செய்திகள் :

கிழக்கு லடாக்கில் புதிய ராணுவப் பிரிவு!

post image

கிழக்கு லடாக்கின் முக்கியப் பகுதியில், இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவை நிரந்தரமாக நிலைநிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆர்பட் (ORBAT - ஆயுதப்படைகளில் ஒரு பிரிவு) நடவடிக்கை பிரிவு 72 என்று அழைக்கப்படுவதுடன், பெரிய நடவடிக்கையாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர். கிழக்கு லடாக்கில் ஒரு நிரந்தரப் பிரிவை நிறுத்துவது, இந்திய ராணுவத்தின் முக்கியப் படியாகும். 832 கி.மீ. நீளமுள்ள இந்திய - சீன எல்லையை பாதுகாக்கும் பொறுப்பில், ஏற்கெனவே ஒரு பிரிவு உள்ள நிலையில், மேலும் புதிதாய் பிரிவு சேர்க்கப்படவுள்ளது.

2020, மே மாதத்தில் பாங்கோங் ஏரி அருகே இந்தியா - சீனா இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஜூன் மாதத்தில் பெரிய தாக்குதலும் நடத்தப்பட்டது. இறுதியாக, கடந்தாண்டில்தான் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னை தீர்ந்தது. இந்த நிலையில்தான், கிழக்கு லடாக் பகுதியில் இந்திய ராணுவப் பிரிவு நிறுத்தப்படவுள்ளது.

இந்தப் பிரிவில் மேஜர் ஜெனரல் தலைமையில் 10,000 முதல் 15,000 வீரர்கள் மற்றும் 3 முதல் 4 படைகள் இருக்கும்; படையில் தளபதி தலைமையில், 3,500 முதல் 4,000 வீரர்கள் இருப்பர். இதுகுறித்த தகவலில் தெரிவித்ததாவது, தலைமையகம் எழுப்பப்பட்டு வருகிறது; ஒரு படைப்பிரிவு தலைமையகம் ஏற்கனவே கிழக்கு லடாக்கில் நிறுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.

மேலும், இந்த பிரிவுக்காக வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. உலகின் மிக முக்கியமான எல்லைகள் மற்றும் போர்க்களங்களில் சிலவற்றைக் கையாளும் படைப்பிரிவான 14 ஃபயர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸின்கீழ், பிரிவு 72 நிரந்தரமாக நிலைநிறுத்தப்படும். பிரிவு 72, தற்போது சீருடைப் படையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சீருடைப் படையும், ரியாசியில் உள்ள அதன் முந்தைய இடத்துக்கு விரைவில் மாற்றப்படும்.

- மயங்க் சிங்

இதையும் படிக்க:வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் இந்தியா!

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க

காமக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம், ஆந்திரம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமக்யா செல்லும் விரைவ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்! -பிகாரில் அமித் ஷா பேச்சு

பிகாா் மாநில பேரவைத் தோ்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை மேலும் வலுப்படுத்துமாறு பொதுமக்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

காங்கிரஸின் கொள்கைகளால் அதிகரித்த நக்ஸல் தீவிரவாதம்! -பிரதமா் மோடி குற்றச்சாட்டு

மத்தியில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸின் கொள்கைகளால் சத்தீஸ்கா் மற்றும் பிற மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதம் அதிகரித்தது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா். சத்தீஸ்கா் மாநிலம், பில... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 50 நக்ஸல்கள் சரண்

சத்தீஸ்கா் மாநிலத்தில் ரூ.68 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த 14 நக்ஸல்கள் உள்பட 50 போ் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். பிலாஸ்பூா் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிரதமா் மோடி வருவதற்கு சில மணி நேரங்... மேலும் பார்க்க