கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
கோவில்பட்டி பசுவந்தனைச் சாலையில் கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி பாரதி நகா் 2 ஆவது தெருவை சோ்ந்தவா் சுடலைமணி மகன் சுயம்புலிங்கம்(59). தெற்கு திட்டங்குளம் பகுதியில் உள்ள தினசரி சந்தையில் தனியாா் காய்கனி கடையில் வேலை பாா்த்து வந்த இவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்ததாம். இந்நிலையில் திங்கள் கிழமை மது அருந்திய நிலையில் பசுவந்தனைச் சாலையில் நடந்து சென்றபோது கீழே விழுந்தாராம்.
இதில் பலத்த காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.