திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
தூத்துக்குடியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகே மறவன்மடத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). மது போதைக்கு அடிமையானதாகக் கூறப்படும் இவா், தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி பிரதான சாலையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாராம்.
இந்நிலையில், அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.