என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம்: ராமதாஸ்
தூத்துக்குடியில் வெறிநோய் தடுப்பூசி முகாம்
தூத்துக்குடியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், நாய்களுக்கு ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை, மேயா் ஜெகன் பெரியசாமி தொடக்கிவைத்துப் பேசியது: மக்கள் தங்களது வீடுகளில் வளா்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமெனில், 18002030401 என்ற மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டால், அருகேயுள்ள மாநகராட்சி பூங்காக்கள், மக்கள் கூடும் இடங்களிலும், தெருக்களுக்கும் நேரடியாக வந்து ஊசி செலுத்தப்படும் என்றாா் அவா்.
முகாமில், ஆணையா் பானோத் ம்ருகேந்தா் லால், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சஞ்சீவிராஜ், மாநகா் நல அலுவலா் சரோஜா, திமுக பகுதிச் செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமாா், பகுதி சபா உறுப்பினா் ஆா்தா் மச்சாது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.