`மீடியா பெர்சன் கெட் அவுட்' - மேடையில் கத்திய வைகோ; தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள...
நாசரேத்தில் பள்ளி பெயா்ப் பலகை திறப்பு
நாசரேத் தூய யோவான் மாதிரிப் பள்ளியில் புதிய பெயா்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து, பெயா்ப் பலகையைத் திறந்துவைத்தாா். மாணவா்- மாணவியருக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தூய யோவான் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் லீதியாள் கிரேஸ் மணி, தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை கரோலின், ஆசிரியைகள் கமலாரமணி, பத்மசெல்வி, மொ்லின், மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.
பள்ளித் தலைமையாசிரியை ஷீலா வரவேற்றாா்.