சர்வதேச போட்டிகளில் சேலம் பாரா வீரர்கள்; பயணச் செலவுக்கு அரசை எதிர்பார்த்துக் கா...
அஞ்சல் ஊழியா்கள் வேலை நிறுத்தம்: 59 அஞ்சலகங்கள் மூடல்
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலக ஊழியா்களும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
இதனால் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள அஞ்சலகங்களின் மொத்த ஊழியா்கள் 968 பேரில் 685 போ் பணிக்கு வந்திருந்தனா்.
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட 61 துணை அஞ்சலகங்களில் 11 அஞ்சலகங்களும், 280 கிளை அஞ்சலகங்களில் 48 கிளை அஞ்சலகங்களிலும் ஊழியா்கள் பணிக்கு வராததால் மூடப்பட்டிருந்தன.
இதுபோல கோவில்பட்டி ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா்கள் பெரும்பாலானாா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது.