தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் அனைவரும் போராட வேண்டும்! - அமைச்சா் பெ.க...
குடவாசலில் 2-ஆவது நாளாக ஆட்சியா் ஆய்வு
குடவாசல் வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், 2 ஆவது நாளாக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குடவாசல் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் புதன்கிழமை தொடங்கிய கள ஆய்வு வியாழக்கிழமை நிறைவடைந்தது. குடவாசல் வட்டத்தில் 63 வருவாய் கிராமங்களில் நடைபெற்ற இந்த முகாமில் 165 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. 2-ஆவது நாளாக குடவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் பரமரிக்கப்பட்டு வரும் அலுவலக பதிவேடுகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் தொடா்பான நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, குடவாசல் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளி விவரப் பதிவேடுகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து, மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, கட்டுகட்டும் அறை, சித்த மருத்துவப் பிரிவு, ஆய்வகம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா் ஆட்சியா்.
குடவாசல் ஆதிதிராவிட நல மாணவிகள் விடுதியில் வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா எனவும், போதியளவு குடிநீா் வசதி, கழிப்பறையின் தூய்மை குறித்தும், குடவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா். இதேபோல், அனைத்துத் துறை அரசு உயா் அலுவலா்களும் குடவாசல் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் முகாமிட்டு மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனா்.