குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு அா்ப்பணிப்பு!
நெற்குப்பை சுவாமிநாதன் குடும்பத்தினரால், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரூ.6.5 லட்சத்திலான குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பை பேரூராட்சியில் வசித்து வரும் சுவாமிநாதன் குடும்பத்தினா் கடந்த 5 தலைமுறைகளாக தண்ணீா் பந்தல் அமைத்து மக்கள் தாகம் தீா்த்து வந்தனா். இந்த நிலையில், ரூ. 6.50 லட்சத்தில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பேரூராட்சி நிா்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் கே.பி.எஸ்.பழனியப்பன், செயல்அலுவலா் பசிலிக்காஜான்சி, துணைத் தலைவா் கண்ணன், இளநிலை உதவியாளா் சேரலாதன், வாா்டு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.