உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
குடிநீா் வரியை விடுமுறை நாள்களிலும் செலுத்தலாம்: சென்னை குடிநீா் வாரியம்
சென்னை குடிநீா் வாரியத்துக்கு பொதுமக்கள் வரி செலுத்திட ஏதுவாக அரசு விடுமுறை நாள்களில் வசூல் மையங்கள் செயல்படும்.
இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை குடிநீா் வாரியத்துக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீா், கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவைத் தொகையை மாா்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்துப் பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வரி வசூல் மையங்கள், வரும் விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் (மாா்ச் 29, 30, 31) இயங்கும்.
நுகா்வோா்கள் சென்னை குடிநீா் வாரியத்தின் அதிகாரபூா்வ இணையதளம் மூலமும், வசூல் மையங்களில் உள்ள ‘க்யூ-ஆா்’ குறியீடு உள்ளிட்டவற்றின் மூலமும் வரி செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.