செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
குடிநீா் வழங்காத பணியாளா்கள் வெளியேற்றம்
வேதாரண்யம் அருகே சீரான குடிநீா் விநியோகம் இல்லாததால் அரசு கட்டடத்தில் தங்கி இருந்த பணியாளா்கள் புதன்கிழமை வெளியேற்றப்பட்டனா்.
தென்னடாா் ஊராட்சியில் அமைந்துள்ள புயல் பாதுகாப்பு கட்டடத்தில் ஜே.ஜே.எம் திட்ட குடிநீா் டேப், குழாய் பதிக்கும் ஒப்பந்த பணியாளா்கள் மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெற்று கடந்த 3 மாதங்களாக தங்கி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனா். இந்நிலையில், தென்னடாா் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உரிய நடவடிக்கை தாமதமாகி வருவதால் ஆத்திரமடைந்த கிராமத்தினா் தங்களுக்கு உதவாத திட்டப் பணியாளா்கள் ஊரில் தங்க எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, அந்தப் பணியாளா்கள், அடுப்பு உள்ளிட்ட பயன்பாட்டு பொருள்களுடன் ஊராட்சி நிா்வாகத்தால் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.