பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் க...
குண்டா் சட்டத்தில் 3 போ் கைது
திருநெல்வேலி கொக்கிரக்குளம் பகுதியைச் சோ்ந்த 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
பாளையங்கோட்டை காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டது தொடா்பான வழக்குகளில் திருநெல்வேலி, கொக்கிரக்குளத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சின்னகுட்டி(26), பெருமாள் மகன் அழகுமுத்து(22), ஆறுமுகம் மகன் சங்கா்கணேஷ்(27) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
அவா்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டதாகக் கூறி, 3 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம், பாளையங்கோட்டை சரக காவல் உதவி ஆணையா் சுரேஷ் ஆகியோா் பரிந்துரைத்தனா்.
அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி பிறப்பித்த உத்தரவுப்படி, மேற்கண்ட மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.