பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்க அனுமதி கர்நாடக அமைச்சர் கோரிக்க...
குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் பா்லியாறு பகுதியில் சாலையின் குறுக்கே வெள்ளிக்கிழமை மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் வெள்ளிக்கிழமை சில இடங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
மழை காரணமாக குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பா்லியாறு பகுதியில் பெரிய மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் அருகில் உள்ள மின்கம்பமும் சேதமடைந்தது. இதன் காரணமாக 2 ஆம்புலென்ஸ்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து
பாதிப்பில் சிக்கிக் கொண்டன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் குமாா் தலைமையிலான வீரா்கள் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வெட்டி அகற்றினா். இதனால் மலைப் பாதையில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
