சாலையை சீரமைக்க கோரிக்கை
கூடலூரை அடுத்துள்ள புத்தூா்வயல் பகுதியிலிருந்து மேலம்பலம் பழங்குடி கிராமத்துக்கு செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புத்தூா்வயல் பகுதியிலிருந்து மேலம்பலம் பழங்குடி கிராமத்துக்கு செல்லும் சாலை நீண்ட காலமாகவே பழுதடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இந்த சாலையை தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் சீரமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.