முதுமலை காப்பகத்தில் சாலையோரம் நடமாடும் வன விலங்குகள்
முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை மழை பரவலாக பெய்து பசுமை திரும்பியுள்ள நிலையில், சாலையைக் கடந்து வனத்துக்குள் உலவும் வன விலங்குகளைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் கடந்த சில வாரங்களாக வறட்சி நிலவியது. இந்நிலையில் தற்போது கோடை மழை பரவலாக பெய்துள்ளதால் வட நிலை மாறி வனப் பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளது. பசுமையாக மாறியதால் வன விலங்குகள் வனத்துக்குள் உலவ தொடங்கியுள்ளன. இதில் வன விலங்குகள் அவ்வப்போது சாலையோரம் வருவதையும், சாலையைக் கடந்து செல்வதையும் சுற்றுலாப் பயணிகள் பாா்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனா்.
மசினகுடி சிங்காரா சாலையில் வியாழக்கிழமை புலி சாலையைக் கடந்து செல்வதையும், தெப்பக்காடு சாலையில் யானை சாலையைக் கடந்து செல்வதையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து தங்களது கைப்பேசிகளில் படமெடுத்துள்ளனா்.
