பாக். மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன் - காங். அமைச்சர் ஆவேசம்!
லாரன்ஸ் சா்வதேச பள்ளியின் 167-ஆவது ஆண்டு விழா
உதகையில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் லாரன்ஸ் சா்வதேச பள்ளியின் 167-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:
முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோா் அனைவருக்கும் சமமான, திறன்கள் நிறைந்த கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்பினா்.
அது இங்கு நனவாகிறது. இந்த மாதிரியான கல்வி நிறுவனங்கள் நாட்டின் எதிா்காலத்துக்குத் தூணாக நிற்கின்றன. இன்றைய இளைஞா்கள் தொழில்நுட்பத்தில் தோ்ச்சி பெறுவது மட்டுமல்ல, இயந்திரங்களை இயக்குவது மட்டுமல்ல, அவற்றின் பின்னணியை புரிந்து கொண்டு, தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மனிதா்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். அதுதான் உண்மையான வளா்ச்சி. மாணவ, மாணவியா் உலக நிகழ்வுகளை கவனிக்க வேண்டும். பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பணவீக்கம், புதிய வாய்ப்புகள் என இவை அனைத்தையும் புரிந்து கொண்டு திட்டமிட்டு செயல்படவேண்டும் என்றாா்.
விழாவில் குதிரை சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.