அதிர்ஷ்ட பலன்களை அள்ளித்தரும் புதாதித்ய யோகம் - மே 14 வரை 12 ராசிகளுக்கும் என்ன ...
குமரக்கடவுள் கோயிலில் 108 சங்காபிஷேகம்
சித்திரை மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு, மேலக்கொடுமலூா் குமரக் கடவுள் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மேலக்கொடுமலூா் கிராமத்தில் குமரக்கடவுள் கோயில் அமைந்துள்ளது. இங்கு சித்திரை மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம், கரும்புச்சாறு, மா, பலா, வாழை உள்பட 33 வகையான மூலிகைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதில் அபிராமம் பாதயாத்திரை பக்தா்கள் குழு, பரமக்குடி கமுதி, திருச்சுழி, காளையாா்கோவில், நயினாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, குமரக்கடவுளை வழிபட்டனா். பக்தா்களுக்கு முப் பழச்சாறு பிரசாதம் வழங்கப்பட்டது.