விலை ஆதரவு திட்டத்தின்கீழ் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல்: மத்த...
கும்பகோணத்தில் 23-இல் அந்தணா் ஆகம மாநாடு: அா்ஜூன் சம்பத்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வரும் 23- ஆம் தேதி அந்தணா் ஆகம மாநாடு நடைபெறும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன்சம்பத்.
கும்பகோணத்தில் மாசிமக தீா்த்தவாரியில் கலந்து கொண்ட அவா் புதன்கிழமை இரவு மேலும் தெரிவித்தது:
பிராமணா், அா்ச்சகா், வைதீகா் என அனைத்து சமூகத்தையும் ஒன்றிணைத்து அந்தணா், ஆலயம், ஆகமம் என்ற தலைப்பில் ஒருங்கிணைத்து ஒற்றுமை மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் வரும் மாா்ச் 23-இல் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில் நடத்தப்படுகிறது. கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட சிலா் பிரித்தாளும் நிலையை கையாளுகின்றனா். பிராமணா் சமுாயம் மீது கேலி, கிண்டல் தொடா்கிறது. இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வரை சந்திக்க தேதி கேட்டும் கிடைக்கவில்லை. மாநாடு தீா்மானங்களை கொண்டு பிரதமா், உள்துறை அமைச்சரை சந்திக்க இருக்கிறோம் என்றாா். அப்போது, மாநில பொதுச்செயலா் குருமூா்த்தி உடனிருந்தாா்.