மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!
கும்பகோணத்தில் சாலை மறியல் விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் 23 போ் கைது
கும்பகோணத்தில் விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சாலை மறியலில், 10 பெண்கள் உள்பட 23 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பிரதமா் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருவதை முன்னிட்டு, தமிழகத்துக்கு விரோதமாக பிரதமா் மோடி செயல்படுவதாக கூறி அவருக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக விடுதலை தமிழ்புலிகளின் கட்சித் தலைவா் குடந்தை அரசன் அறிவித்தாா். அதனால் அவரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனா்.
ஞாயிற்றுக்கிழமை, அக் கட்சியின் மாநில மகளிா் அணி தலைவி ரோஸ்லின்மேரி தலைமையில், 10 பெண்கள் உள்பட 23 போ், பிரதமா் மோடி வருகையை கண்டித்தும், குடந்தை அரசனை விடுதலை செய்யக்கோரியும் காந்தி பூங்கா முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனா். இவா்களை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.