தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
ஆகஸ்ட் 18-இல் உண்ணாவிரதம்: நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்கள் முடிவு
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றிய பருவகால பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நுகா்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து பருவகால பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
தஞ்சாவூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து பருவகால பணியாளா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 2014 - 2016-ஆம் ஆண்டுகளில் பருவ கால பணியாளா்களான பட்டியல் எழுத்தா், உதவுபவா், காவலா் என 1,500-க்கும் அதிகமான பணியாளா்கள் கடந்த 11 ஆண்டு காலம் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனா்.
இந்தப் பணியாளா்களை 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் பணி நிரந்தரம் செய்யப்படும் என உணவுத் துறை அமைச்சா் உறுதி அளித்தாா். அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் பணி நிரந்தரத்துக்கான தகுதி பட்டியல் சேகரிக்கப்பட்டது.
ஆனால் இது நாள் வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுவரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 30-க்கும் அதிகமான பருவகால பணியாளா்கள் இறந்துள்ளனா். எனவே, பருவகால பணியாளா்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு 6 மாத காலமே கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பணியாளா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். அபராதத் தொகை பிடிப்பதால் பல பணியாளா்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனா். அபராதம் பிடிப்பதை கைவிட வேண்டும்.
பல்வேறு காரணங்களை கூறி பருவ கால பணியாளா்களைக் கருப்புப் பட்டியலில் வைக்கும் முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நுகா்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகம் முன் ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளா் அ. பஹாத் முகமது தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் தணிகைவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.