ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!
திருவையாறில் ஆடிப்பூர விழா தேரோட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழா ஜூலை 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் அம்பாள் புறப்பாடு நடைபெற்று வந்த நிலையில், 24-ஆம் தேதி அப்பா் கயிலைக் காட்சி விழா நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது. இத்தேரில் அறம்வளா்த்த நாயகி எழுந்தருளினாா். பின்னா், காலை 6 மணியளவில் ஏராளமான பெண்கள் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனா். நான்கு வீதிகளில் வலம் வந்த இத்தோ் நிலையை அடைந்தது.
மேலும், திங்கள்கிழமை காவிரியில் ஆடிப்பூர தீா்த்தவாரி, கொடியிறக்கத்துடன் இவ்விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27-ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.