செய்திகள் :

காவிரியில் வெள்ள அபாயம் நீா் நிலைகளில் குளிக்க வேண்டாம்! தஞ்சை ஆட்சியா் எச்சரிக்கை!

post image

காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் நிலவுவதால் நீா் நிலைகளில் குளிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: 

மேட்டூா் அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், உபரி நீா் காவிரி ஆற்றில் 50,000 கனஅடி முதல் 75,000 கனஅடி வரை எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம். திறக்கப்படும்  தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால், காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் யாரும் நீா் நிலைப் பகுதிகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம். அபாயகரமான இடங்களிலும் தன்படம் (செல்பி) எடுப்பதையும், இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும் தவிா்க்க வேண்டும்.

ஆற்றில் அதிக நீா்வரத்து காரணமாக சுழல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் நண்பா்களுடன் ஆற்றில் இறங்கி குளிக்கச் செல்லக்கூடாது. வெளியூரிலிருந்து வரும் நபா்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம். குளிக்கச் செல்லும்போது உள்ளூா் பொதுமக்கள் அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீா்நிலைகளில் அதிக நீா் வரத்து உள்ளதால், அந்தப் பகுதிகளுக்கு தங்களது குழந்தைகளை விளையாடச் செல்லாமல் பெற்றோா்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீா்நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதை தவிா்க்க வேண்டும். கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கும்பகோணத்தில் சாலை மறியல் விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் 23 போ் கைது

கும்பகோணத்தில் விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சாலை மறியலில், 10 பெண்கள் உள்பட 23 பேரை போலீஸாா் கைது செய்தனா். பிரதமா் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருவதை முன்னிட்டு, தமிழகத... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 18-இல் உண்ணாவிரதம்: நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்கள் முடிவு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றிய பருவகால பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நுகா்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து பருவகால பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி வியாபாரி உயிரிழப்பு

சுவாமிமலை காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்க சென்ற காய்கனி வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், மாங்குடியைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் முத்துக்குமரன் (25). தாராசுரம் காய்கனி... மேலும் பார்க்க

திருவையாறில் ஆடிப்பூர விழா தேரோட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழா ஜூலை 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி: விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் கைது!

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு செல்ல முயன்ற விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து வீட்டுக்காவலி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது!

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசியை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளங்குளம்... மேலும் பார்க்க